#Breaking-காவலர் முத்துராஜை சிறையில் அடைக்க உத்தரவு!!

Default Image

கைது செய்யப்பட்ட காவலர்  முத்துராஜ் மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

மேலும்  இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும்  இந்த வழக்கில்  காவலர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தப்பி தலைமறைவானதை அடுத்து தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டார்.பின் சி.பி.சி.ஐ.டி. போலீசார்  தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் அவருடைய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே தனது சொந்த ஊரானள பூசனூர் பகுதியில் முத்துராஜ் சுற்றித்திரிவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார்  முத்துராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட முத்துராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முத்துராஜ் மீது (கொலை ) வழக்குப்பதிவு?

இந்நிலையில்,  காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  முத்துராஜ்ஜை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக  தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியானது இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, நீதிபதி குடியிருப்புக்கு தற்போது காவலர் முத்துராஜ்  அழைத்து செல்லப்பட்டார் நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவலர்  முத்துராஜை ஜூன் 17 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவர்களுடன் தற்போது  காவலர் முத்துராஜும் சிறையில் அடைக்கப்படுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்