பாக்.,இந்தியா கடும் கண்டனம்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:பாக்., ராணுவம், சமீப காலமாகவே கடந்த 2003ம் ஆண்டில் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி குண்டு வீச்சு, தாக்குதல் என நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் மாதம் வரை எல்லை தாண்டி நடைபெற்ற தாக்குதல்கள் சுமார் 2,432 இந்த தாக்குதல்களில், இந்தியாவைச் சேர்ந்த 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.பாக்.,தாக்குதலுக்கு தக்க பதிலடியை இந்திய ராணுவமும் திருப்பி தந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த தாக்குதலுக்கு இடையே, பாக்., ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாதிகளை எல்லாம் ஊடுருவச் செய்கிறது.
மேலும் எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை தாண்டி நடைபெறுகின்ற இத்தகைய தாக்குதல்களையும், ஊடுருவல் முயற்சிகளையும் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.தாக்குதல் தொடர்பாக, இரு நாட்டு ராணுவ டைரக்டர் ஜெனரல்களும் பேசி உள்ளனர். இருந்த போதிலும் தொடர்ந்து பாக் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவது சரியானது கிடையாது மேலும் தாக்குதல் தொடர்ந்தால் இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.மேலும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைய் தெரிவித்து கொள்வதாக கூறப்பட்டதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.