பதற்றத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது –  சீனா.!

இந்திய -சீன எல்லை லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில்கடந்த மாதம் 15-ம் தேதி  இருநாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால், இருநாடுகளும்  தங்களது படைகளை குவித்து வந்தன. இதைத்தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து இருநாட்டு படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று எந்த வித முன் அறிவிப்பு இன்றி பிரதமர் மோடி , தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன் லடாக் சென்றார்.  நிம்பு பகுதிக்கு சென்ற மோடி அங்கு உள்ள இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பயணம் குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், இந்திய – சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக அதிகாரிகள் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில், பிரச்சனையை சிக்கலாக்கும் வகையில் சம்மந்தப்பட்டவர்கள் நடந்து கொள்ளக் கூடாது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

author avatar
murugan