தந்தை-மகன் கொலை வழக்கு.. பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நிறைவு!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினர். அதனைதொடர்ந்து, பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்பொழுது அந்த விசாரணை முடிந்துள்ளதாக தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025