கொரோனாவை நாங்கள் முற்றிலுமாக தடுத்துள்ளோம் – வடகொரிய அதிபர்

உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், கொரோனா பரவலை நாங்கள் முற்றிலும் தடுத்துள்ளோம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து, மக்களை காப்பாற்ற ஒவ்வொரு நாட்டு அரசும் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இதுகுறித்து கூறுகையில், உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், கொரோனா பரவலை நாங்கள் முற்றிலும் தடுத்துள்ளோம் என்றும், அதேசமயம் தொற்றுநோய்க்கு எதிரான முயற்சியில் மனநிறைவு அடைந்துவிட்டதாகவும் கருதாமல் இன்னும் அதிகபட்ச எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.