பாம்பின் பல்லை பிடுங்கிய இந்தியா
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது .சஹல் அதிக பட்சமாக 3 விக்கெட் எடுத்தார்.
பின்னர் கலமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. தினேஷ் கார்த்திக் 29(8) மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் கடைசி ஒரு பந்து மிஞ்சிய நிலையில் 6 அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்க தேசம் அணி இலங்கை வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டனர் அதுமட்டுமில்லாமல் உடை மாற்றும் அறையின் கண்ணாடி உடைக்கப்பட்டது .வங்கதேச அணி வெற்றி பெற்றதும் அந்த அணி வீரர்கள் மைதானத்தில் பாம்பு நடனம் ஆடினர் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய மற்றும் இலங்கை ரசிகர்கள் பாம்பு நடனம் ஆடி வங்க தேச அணி வீரக்ளுக்கு பதிலடி கொடுத்தனர்.
சமுக வலைதளங்களில் வங்க தேச அணியின் பாம்பு நடனம் விமர்சித்து பேசப்பட்டு வருகிறது .