பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயருகிறது !
சென்னை: தமிழகத்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான சுயநிதிக் கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பொறியியல் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கான பாடப்பிரிவுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கான பாடப்பிரிவுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று என்பிஏ அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கான கட்டணம் 45 ஆயிரம் ரூபாயிலிருந்து 55 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
என்பிஏ தரச்சான்று பெற்ற நிர்வாக ஒதுக்கீட்டுக்கான பாடப்பிரிவுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 87 ஆயரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த கல்விக்கட்டண உயர்வானது தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கானது மட்டும் எனவும் கல்விக்கட்டண நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது.