ரேஷனில் ஜூன் மாத பொருட்களை வாங்க அவகாசம் – அமைச்சர் காமராஜ்
ரேஷனில் ஜூன் மாத பொருட்களை வாங்க அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த சமயத்தில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,சென்னை ,சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் ,மற்றும் மதுரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ,முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் ரேஷனில் ஜூன் மாதத்திற்கான இலவசப் பொருட்களை பெற இம்மாதம் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.