போலீசார் – ரவுடி மோதல்.! டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் சுட்டுக்கொலை.!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி விகாஸ் துபே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், இன்று விகாஸ் துபே இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது, போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டதகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரவுடிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் உயிரிழந்த சம்பவம் கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.