அஞ்சான் படம் தோல்வியடைந்ததால் இயக்குநருக்கு
சூர்யாவின் அஞ்சான் பட தோல்வியால் இயக்குனர் லிங்குசாமிக்கு தனது சம்பளத்தில் 3 கோடி விட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சூர்யா அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றே கூறலாம். தற்போது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் மீது தான் உள்ளது சூரரை போற்று ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சூர்யா அவர்கள் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அஞ்சான் படத்தை தொடர்ந்து தான் தொடர் தோல்வியை சந்தித்தார் என்பது அனைவரும் அறிந்ததே இந்த படம் மாஸ் படமாக இருந்தாலும் கதையில் சொதப்பி விட்டார் அஞ்சான் படத்தின் இயக்குனர் லிங்குசாமி. இது சூர்யாவின் மார்க்கெட்டை சாய்த்து விட்டது.
இந்த நிலையில் சூர்யா அஞ்சான் பட தோல்வியால் இயக்குநர் லிங்குசாமிக்கு தனது சம்பளத்தில் இருந்து மூன்று கோடி வரை விட்டு கொடுத்து விட்டாராம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.