அழகான வீடியோ:கியூட்டான சிரிப்புடன் லேடி சூப்பர் ஸ்டார்.!
நிவின் பாலி மற்றும் நயன்தாரா நடித்த லவ் ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பில் சிரித்து கேஷுவலாக படக்குழுவினருடன் பேசும் நயன்தாராவின் வீடியோ தீயாய் பரவி வருகிறது.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இந்த ஜோடியின் வீட்டிற்குள் இருந்து சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். தற்போது நயன்தாரா ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் காதலான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல், ரஜினிகாந்தின் அண்ணாத்த ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் லவ் ஆக்ஷன் டிராமா. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஜூ வர்க்கீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா லவ் ஆக்ஷன் டிராமா படத்தின் படப்பிடிப்பில் அனைவரிடமும் சிரித்து பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.