த.மா.கா. கட்சியின் விவசாய இளைஞரணி செயலாளர் கொரோனவால் உயிரிழப்பு!
தமிழ் மாநில கட்சியின் மாநில விவசாய இளைஞரணி செயலாளரான புலியூர் நாகராஜன், கொரோனவால் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 94,049 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஆள்பாராமல் பரவி வருகிறது.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய இளைஞரணி செயலாளராக விளங்குபவர், புலியூர் நாகராஜன். 64 வயதாகும் இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதியானது.
இதன்காரணமாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.