#BREAKING: சாத்தான்குளம் கொலை வழக்கு.! விசாரணை ஒத்திவைப்பு.!
சாத்தான்குளம் கொலை வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடியின் நடவடிக்கை தந்துள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியது. இதைத்தொடர்ந்து, சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் போனில் பேசிய நீதிபதிகள் “கவலைப்பட வேண்டாம். நாங்கள் விரிவான உத்தரவை வழங்குகின்றோம்” என கூறினர்.
பின்னர், சாத்தான்குளம் கொலை வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தடயவியல் துறையினர் சேகரித்து பொருட்களை பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி தேவையில்லை என்று தெரிவித்துள்ளது . ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது ஏன்..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.