#Breaking: சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது
சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 36,826 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், 22,777 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.சென்னையில் 929 பேர் உயிரிழந்துள்ளனர்.