இதுவரை யாரும் பார்த்திராத ராகவா லாரன்ஸின் மகளின் புகைப்படம்.!

Default Image

ராகவா லாரன்ஸ் அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக பணியாற்றி, அதன் பின்னர் தனது முயற்சியாலும் மற்றும் கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மனித நேயமுள்ள மனிதராகவும் விளங்குபவர் ராகவா லாரன்ஸ். தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கிலும் கோடி கணக்கில் நிதியுதவி வழங்கிய ஒரே நடிகர் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் .

இவர் பெரும்பாலும் தனது  குடும்பத்தில் அம்மாவின் புகைப்படத்தை தவிர  மற்றவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது இல்லை. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அவரது மகளான ராகவா சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். அவருக்கும் தனது அப்பாவை போன்று டான்ஸ் மாஸ்டராக ஆக வேண்டும் என்பது ஆசையாம். இந்த நிலையில் தற்போது அவரது மகளுடன் இணைந்துள்ள ராகவா லாரன்ஸின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுவரை ராகவா லாரன்ஸின் மகளை பார்க்காத பலர் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்