பாகிஸ்தானில் முதல் முறையாக ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பெண் நியமனம்.!

Default Image

பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நிகர் ஜோஹர் என்ற பெண் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களையே சார்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள். அங்கு பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டாலும் அரசு வேலைகளிலும், ராணுவம் உள்ளிட்ட துறைகளிலும் அனுமதி இல்லை . தற்போது சில இடங்களில் பெண்களையும் அனைத்து துறைகளிலும் நியமனம் செய்து காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக நிகர் ஜோஹர் என்ற பெண்ணை நியமனம் செய்துள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இயக்குநரான ஜெனரல் மேஜ் ஜென் பாபர் இப்திகார் ட்வீட் செய்துள்ளார். 1985-ல் ராவல்பிண்டியிலுள்ள ராணுவ மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற நிகர் ஜோஹர் இராணுவ மருத்துவ படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

அதன் பின்னர் 2017-ல்  ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதிவு உயர் செய்யப்பட்ட மூன்றாவது பெண் என்ற புகழை பெற்றார். தற்போது ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பதிவு உயர்வு பெற்றுள்ளார்.  நிகர் ஜோஹர் அவர்களின் தந்தை மற்றும் கணவர் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்