ஹரியானாவில் ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

ஹரியானாவில் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் அச்சம் காரணமாக, இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் ஹரியானா மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14,210 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 232 பேர் உயிரிழந்த நிலையில், 9,502 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் அங்கு 4,476 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்ததையடுத்து, பள்ளி, கல்லூரிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஹரியானாவில் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் எனவும், அதன்பின் 31 ஆம் தேதி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.