இரட்டை ஆண்டு ஆயுள் தண்டனை… இரட்டை கொலை வழக்கு..!

Default Image

இரட்டை கொலை வழக்கு 10 பேருக்கு ஆயுள் .

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் கூலித்தொழி செய்துவந்தார், இவருடைய மகன்கள் சதீஸ்குமார் மற்றும் வினோத்குமார் சதீஸ் குமார் இவர் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சதீஸ்குமார் மற்றும் வினோத்குமாரை 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மற்றும் அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டேவிட், தேவராஜ் , சதீஷ் , பாலமுருகன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது தெரியவந்தது, கொலை நடப்பதற்கு முன் தினம் சதீஸ்குமார் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது லட்சுமணன் வண்டியை நிறுத்தி என் வேகமாக செல்கிறாய் என்று கேட்டு வாக்குவாதம் நடத்தியுள்ளார், அதற்கு பிறகு அணைத்து மக்கள் மற்றும் பெண்கள் முன்பாக தாக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சதீஸ்குமார் தனது அண்ணன் வினோத்குமாருடன் சேர்ந்து லட்சுமணனை கொலை செய்துவிடுவார் என்ற அச்சத்தில் லட்சுமணன் 10 பேர் கொண்ட மர்ம கும்பலுடன் சேர்ந்து வினோத்குமார் மற்றும் சதீஸ்குமாரை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கு கடலூர் வட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. லட்சுமணன், டேவிட்ராஜ், சதீஷ், பாலமுருகன் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்கள் , இதற்கு பின்னர் இவர்களுக்கு நீதிமன்றம், பிடிவாரண்ட் கொடுத்தது .இந்நிலையில் லட்சுமணன் வேப்பூர் கோழிச் சந்தையில் பதுங்கிருந்தார், இதனை தொடர்ந்து மேலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் காவல்துறையினர்  பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணைகள் நேற்று முடிவடைந்து மேலும் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார்.மேலும் கொலைகளை முன்னின்று நடத்திய லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்