தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஜெயக்குமார் பொறுப்பேற்றார்.!
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேற்று நியமனம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக ஜெயக்குமார் பொறுப்பெற்றுள்ளார். அவரிடம் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் எஸ்.பி. அருண் பாலகோபாலன் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.