சாத்தான்குளம் விவகாரம்.! சத்தியமா விடவே கூடாது- ரஜினிகாந்த் காட்டம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் , அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல சினிமா துறையினர் கருத்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்காதற்கு பல கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது ரஜனிகந்த் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தந்தையையும் ,மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொண்டதே மனித இனமே கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும் விடக்கூடாது என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார் .
லேட்டஸ்ட் செய்திகள்
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025