#BREAKING: ஆக்சிஜன் குழாய்கள் அமைக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு.!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.75.28 கோடியில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
200-க்கும் மேல் உள்ள அரசு மருத்துவமனைகளில் பைப்லைன் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட உள்ளது. அதிலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பைப்லைன் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மருத்துமனையில் ஆக்சிஜன்தேவையின் காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.