#BREAKING: நெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து.!
தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நெய்வேலி என்.எல்.சி யில் உள்ள 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பகுதியில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன் கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.