Tiktok பயனர்களுக்கு ஆப்பு.. எந்த வீடியோவும் எடுக்கவில்லை!!
சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ், டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில் முதல்கட்டமாக டிக்டாக் செயலியை கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளார். இந்நிலையில், மொபைலில் டிக்டாக் செயலியை ஏற்கனவே மொபைலில் வைத்திருப்பவர்களுக்கு வீடியோ எதுவும் பிளே ஆகவில்லை. அதில் “NO network connection” என திரையாக்குகிறது.
மேலும், இதுகுறித்து டிக்டாக் செயலியிலே டிக்டாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.