நேற்று தாக்குதல்.! இன்று மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2008-ம் ஆண்டு தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 174 பேரை உயிரிழந்தனர்.
இந்நிலையில், தற்போது தாஜ் ஹோட்டலுக்குள் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மாவட்டத்திலிருந்து தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால், எல்லைப் பகுதி மற்றும் மும்பை முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் குறித்து இந்திய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று கராச்சியில் உள்ள பாகிஸ்தான் வர்த்தக அலுவலகத்தில் மீது 4 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர். மேலும், தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
நேற்று தாக்குதல் நடத்திய மறுநாள் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.