ஒருமையில் நீதிபதிக்கே மிரட்டல்!என்ன நடக்குது? ஆள்வது யார்?
நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்களே! என்ன நடக்கிறது? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாத்தன் குளத்தில் வியாபரிகளான தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய காவல் ஆய்வாளரும் அங்கு நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசிதாக சாத்தான்குளம் காவலர் மகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட தகவல் வெளியானது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியிள்ளதாவது: சாத்தான்குளம் கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.