#BREAKING: எல்லை விவகாரம்.! நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை.!
லடாக்கில் இந்தியா- சீனா கமாண்டர்கள் நிலையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை காலை 10:30 மணிக்கு சுஷூலில் நடைபெறுகிறது. கடைசி இரண்டு கூட்டங்கள் சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் நடைபெற்றன என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன் 6 ம் தேதி நடந்த முதல் கூட்டத்தில், இரு தரப்பினரும் வெளியேற ஒப்புக் கொண்டனர். பின்னர், ஜூன் 22 அன்று, இந்திய மற்றும் சீன இராணுவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது.
எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் விரும்பியதன் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.