லடாக் மோதல்.! எல்லையில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா.!
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மோதலுக்கு பின்னர் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மறுபக்கம் லடாக்கில் சீனா தொடர்ந்து தனது படைகளை குவித்து வருகிறது.
சீனா – இந்தியா இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலுக்கு முன் தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்கு சீனா அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.
சீன தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், “என்போ பைட் கிளப்பை சேர்ந்த 20 வீரர்கள் திபெத் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது. “என்போ பைட் கிளப்” சர்வதேச தற்காப்பு கலை போட்டிகளில் பங்கேற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.