ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மாநாட்டில் தீர்மானம்!
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லீ கூறியதையடுத்து, தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் வெளியேறியது.
மத்திய அரசு மீது ஒய் எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.