தமிழ்நாடு இறப்பு விகிதம் குறைந்துள்ளது – மருத்துவ குழு.!

நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என மருத்துவ குழு விளக்கம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நாளை முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை நிறைவு பெற்ற பின்னர் மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்பொழுது அவர்கள் கூறுகையில்,தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் பொது போக்குவரத்தால் நோய் பரவல் ஏற்படுவதாக அரசிடம் தெரிவித்துள்ளோம் எனவும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என மருத்துவ குழு தெரிவித்தனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,079 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025