Lockdown: மணிப்பூரில் ஜூலை-15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.!
மணிப்பூரில் ஊரடங்கு ஜூலை 15 வரை நீட்டிக்க்கப்படுகிறது.
மணிப்பூரில் வருகிற ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என மந்திரி பைரன் சிங் தெரிவித்தார். அவர் கூறும்பொழுது, வரும் ஜூலை 1ந்தேதியில் இருந்து 15ந்தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு மணிப்பூரில் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார். மேலும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை அனுமதிக்கப்படுகிறது. ஊரடங்கு ஜூன் 30 அன்று முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 1,092 கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அனைத்து கொரோனா நடவெடிக்கையும் பராமரித்து ஜூலை 1 முதல் 15 வரை மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை இயங்கும் என்றும் திரு சிங் அறிவித்தார். இந்த நாட்களில் வேறு எந்த பொது போக்குவரத்து இயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.ஜூலை 15 க்கு பிறகு பஸ் சேவையைத் குறித்த முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.