ரோகித்தின் இளம்படை இலங்கையில் சாதனை புரியுமா?

Default Image

முத்தரப்பு டி20 கிரிக்கெட்  இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டிகள்  இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று  மோதுகின்றன.

இந்த தொடரில், இந்திய அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கபட்டு இளம் வீரர்களோடு களம் இறங்கியது. அதற்கேற்றார் போல வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் தங்களுக்கான வாய்ப்பை சிறப்பாகவே பயன்படுத்தி கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா தொடரில் இடம் பிடித்த ரெய்னாவும் பேட்டிங்கில் அணிக்கு தேவையான போது அதிரடியாக விளையாடி ரன் சேர்க்கிறார்.

இத்தொடரில் ரன் சேர்க்க முடியாமல் தவித்த கேப்டன் ரோகித் ஷர்மாவும் கடந்த போட்டியில் அரை சதம் அடித்து இருப்பது கூடுதல் பலம். வங்கதேசத்தை பொருத்தவரை தொடக்க ஆட்டகாரர் தமிம் இஃபால் தொடகத்திலே கட்டுபடுத்துவது அவசியம். கடந்த போட்யில் 18 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட முகமதுல்லாவும், முஷிஃபிகுர் ரஹிம் இருவரும் அந்த அணியின் துண்களாக விளங்குகிறார்கள். அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணியின் கூடுதல் பலம். இரு அணிகளுமே சமபலத்துடன் விளங்குவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்