கொடூரனாக மாறும் கொரோனா..1 ½ வயது குழந்தை கொரோனாவுக்கு பலி.!
தமிழகத்தில் கொரோனவால் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,079 ஆக அதிகரித்துள்ளது.
அதில் தனியார் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் விழுப்புரத்தை சேர்ந்த 1 ½ குழந்தை கொரோனா காரணமாக 27.06.2020 அன்று இறந்தார். மேலும் இந்த குழந்தைக்கு வளர்ச்சி தாமதம், Aspiration நிமோனியா போன்ற நோயனினால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.