தொடர்ந்து உயரும் பெட்ரோல்,டீசல் விலை ! இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.ஆனால் இதற்கு பல தரப்பினரும் விலையை குறைக்க வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியதை எதிர்த்து இன்று (ஜூன் 29 ஆம் தேதி) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும்.
பெட்ரோலியம் பொருட்களின் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புகளை பிரதிபலிக்கின்ற வகையில் பொது ஊரடங்குக்கு கட்டுப்பட்டு, சமூக விலகலை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியதை எதிர்த்து வருகிற ஜூன் 29 ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும். pic.twitter.com/b2wx9swuYo
— KS_Alagiri (@KS_Alagiri) June 27, 2020