2 மணி நேரத்தில் 35 குட்டிகளை இட்ட கண்ணாடிவிரியன் பாம்பு.!

கோயம்புத்தூர் கோவில் மேடுவில் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் உள்ள ஒரு கழிவறையில் கண்ணாடி விரியன் பாம்பு ஓன்று இருப்பதாதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உடனடியாக தனியார் பாம்பு பிடிக்கும்  முரளியை அழைத்து பாம்பை பிடிக்கச் செய்தார்.

பிடிபட்ட பாம்பை முரளி சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட முடிவெடுத்துள்ளார். இதனால், பிடிபட்ட பாம்பை சாக்குப்பையில் வைத்து கொண்டு சென்றுள்ளார். அப்போது,  கண்ணாடிவிரியன் பாம்பு  சாக்கு பையில் 2 மணி நேரம் இருந்ததால் 35 குட்டிகளை பெற்றெடுத்தது. பின்னர் , முரளி பாம்பு மற்றும் 35 குட்டிகளையும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டுவிட்டார்.

கண்ணாடிவிரியன் பாம்பு குட்டி போடும் வகையை சார்ந்ததாகும் .

author avatar
murugan