#BREAKING: சிறையில் தந்தை ,மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்
தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உயிரிழந்த தந்தை-மகனுக்கு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனிடையே இன்று மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா மற்றும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் சிறையில் தந்தை ,மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில், உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.