காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்தற்கு இன்று மிக மிக வேதனை அடைகிறேன்- இயக்குனர் ஹரி

Default Image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ஹரி ஒரு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். மேலும் காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் இந்த துறை இன்று களங்கப்படுத்தி உள்ளது காவல்துறையே பெருமைப்படுத்தி 5 படம் எடுத்தற்கு இன்று மிக மிக வேதனை அடைகிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்