மோடி தலைமையில் இந்தியா 2 போர்களையும் வெல்லும் -அமித்ஷா பேச்சு.!
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ANI செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், தலைநகர் டெல்லியில் கொரோனா பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லியில் கொரோனா சமூக பரவலாக இன்னும் மாறவில்லை. டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து தரப்பும் இணைந்து செயல்படுகிறோம்.
கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ராகுல் காந்திக்கு அறிவுரை எதுவும் வழங்க வேண்டியது இல்லை. அவர்கள் தங்களது கட்சி பணியைத்தான் செய்கின்றனர். உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா பாதிப்பு பரவாயில்லை என கூறினார்.
#BREAKING: தந்தை-மகன் இறந்தது லாக் அப் டெத் இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு .!
இந்திய பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா 2 போர்களையும் வெல்லும் என அமித்ஷா கூறினார். அதில், சீனாவால் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மற்றும் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ஆகியவற்றை இரு போர் என குறிப்பிட்டு இந்த 2 போர்களையும் மோடி தலைமையில் இந்தியா வெல்லும் என கூறினார்.
மேலும், கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நிகழ்ந்தன. பொறுமை இழந்த புலம்பெயர்ந்தோர் சாலைகளில் நடக்கத்தொடங்கின, அது எங்களுக்கும் வலியைத்தான் கொடுத்தது. பின்னர், புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கப்பட்டது.
இதுவரை 1கோடியே 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர் என அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.