கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஜேசிபி இயந்திரத்தில் கொண்டு சென்ற அவலம்.!
ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி மற்றும் இறந்த கொரோனா நோயாளியை கொண்டு சென்றனர்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பலாசா நகராட்சியின் உதயபுரம் பகுதியில் 72 வயதான கொரோனா வைரஸ் நோயாளியின் உடல் டிராக்டர்களில் மையான பகுதிக்கு கொண்டு சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இறந்தவர் உள்ளூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாகவும் அவர் வியாழக்கிழமை தனது வீட்டில் காலமானார் என கூறபடுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இறந்த பிறகு கொரோனா பரிசோதனையில் கொரோனா உறுதியானது இது குடும்பத்தினருக்கும் தெருமக்களுக்கும் பீதியை ஏற்படுத்தியது. உடலை விரைவாக எடுக்க கூறி ஜே.சி.பி ஊழியர்களை சொன்னதும் அவர்கள்.
நோயாளியின் உடல்களை சில புளு நிற கவர்களால் மறைத்து பிபிஇ உடையணிந்த ஜே.சி.பி ஊழியர்களால் டிராக்டர்களில் எடுத்து செல்லப்பட்டி இறுதிச்சடங்கிற்கு கொண்டு சென்றன. இதனை அந்த தெருவில் உள்ள ஒரு நபர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார் .
இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் ராஜீவை இடைநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட குறைபாட்டை தீவிரமாக கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆணையர் சி.நாகேந்திர குமாரையும் இடைநீக்கம் செய்தார். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வீடியோவைப் பகிர்ந்து சம்பவம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
Utterly shocked to see the deceased bodies of #Coronavirus victims wrapped in plastic & transported on JCBs & Tractors. They deserve respect & dignity even in death. Shame on @ysjagan Govt for this inhumane treatment of the mortal remains pic.twitter.com/BobjAdIZC8
— N Chandrababu Naidu #StayHomeSaveLives (@ncbn) June 26, 2020