வேகமெடுக்கும் கொரோனா..கர்நாடகாவில் ஒரே நாளில் 900-ஐ கடந்து மொத்த பாதிப்பு 12,000-ஐ நெருங்கவுள்ளது.!
கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 918 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,923 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,923 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 371 பேர் இன்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 7287 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 18,552 ஆகவும்,384 பேர் பலியாகியுள்ளதாகவும்,10,244 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 15,685 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2,95,881 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.