பிரதமர் நரேந்திர மோடியிடம் ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை அடமானம் வைத்து விட்டார்கள்!

Default Image

கட்சியில் இருந்து நீக்கபட்ட கே.சி.பழனிச்சாமி, ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள் என்று  குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கேசி பழனிசாமி பேசினார். இதனால் அவரை முதல்வர் பழனிச்சாமி துணைமுதல்வர் ஓபிஎஸ், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினர்.

சர்வாதிகார மனப்பான்மை உடன் ஓ.பி.எஸ்., இபிஎஸ் செயல்படுகின்றனர். அதிமுகவில் இருந்து என்னை நீக்கியதில் டெல்லியின் ஆதிக்கம் உள்ளதுடெல்லியில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது செல்லாது, ஓபிஎஸ், இபிஎஸ் சேர்ந்து கட்சியை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள். அதிமுகவில் இரட்டை தலைமையால் பல பிரச்சனைகள் உள்ளன. ஓ.பி.எஸ்., இபிஎஸ் சுய நலத்துக்காக அதிமுகவை பலியிடக் கூடாது என கூறியுள்ளார்.

மேலும், எடப்பாடியும், ஓ.பி.எஸ்யும் கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அதிமுக தனிநபர் சொத்து அல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். அதைபோல், ஆர்.கே.நகர் தேர்தலில் தோல்வியடைந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்