திடீரென காரை விட்டு இறங்கிய முதல்வர் பழனிசாமி! மக்கள் உற்சாகம்!
முதல்வர் பழனிசாமி, திடீரென காரை நிறுத்தி, மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து அரசு கூறும் வழிமுறைகளை கைக்கொள்ளுமாறும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, சேலத்தில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த சென்று கொண்டிருந்த போது, திருவாச்சி என்ற கிராமத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த முதல்வர் பழனிசாமி, திடீரென காரை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முதலமைச்சரை கண்டதும் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்த நிலையில், அங்கிருந்த சிறுவர் சிறுமியரிடம் கல்வி குறித்து கேட்டறிந்து, அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.