எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்! நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி!

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா இன்னசென்ட் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால் 74,622 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 957 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட எல்லை மூடப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.50 அபராதமும், வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால், ரூ.50 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025