கனடா ஓபன் பேட்மிட்டன் : பிரணாய் தோல்வி

Default Image

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் பிரணாய் 21-17, 14-21, 13-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னிடம் தோல்வி கண்டார்.
மற்றொரு 3-ஆவது சுற்று ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான கரண் ராஜன் 18-21, 14-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கோகி வாடானேப்பிடம் தோல்வி கண்டார்.
காலிறுதியில் மானு-சுமீத் ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 21-17, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சோய் சோல்கியூ-ஜீ வான் கிம் ஜோடியைத் தோற்கடித்தது. 
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-11, 21-17 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் டபேலிங்-செரில் சினென் ஜோடியைத் தோற்கடித்தது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்