நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது.!
நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால் வினியோகம் தொழிலாளர் நலச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கூறுககையில், ‘ ஊரடங்கில் கஷ்டங்களை தாண்டி பொதுமக்களுக்கு தினசரி பால் வினியோகம் செய்து வருகின்றோம். ஆனால், அப்படி செய்தும் சில காவல்துறையினர் மோசமாக நடத்துகின்றனர். அத்தியாவசிய பொருளான பாலை வினியோகிக்கும் விற்பனையாளர்களை விநியோகம் செய்ய விடாமல் போலீஸார் தடுக்கின்றனர். பால் விநியோகம் செய்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பால் விற்பனை நிலையங்களை மூடச்சொல்லி கட்டாய படுத்துகின்றனர். இது போன்ற செயல்களை தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் என அனைவரது கவனத்திற்கும் கொண்டு சேர்த்தும் இதுவரை தீர்வு கிடைக்கப் பெறவில்லை. அதனால் நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.