ஏறத்தாழ 220 பேர் சிறையில் மரணம்- டி.கே.எஸ் இளங்கோவன்
சிறையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் அரசியல் ,சினிமா,விளையாட்டு என பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 2012 தொடங்கி இன்று வரை சிறைக்கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாழ 260 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு எந்த முறையான விசாரணையும் இல்லை. பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றம் செல்ல திமுக தயாராக உள்ளது.அதிமுக ஆட்சியில் சிறையில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லை .கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட போலீசாரால் தாக்கப்பட்டு இறப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.