கேரளாவில் கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க புதிய முயற்சி!
கேரளாவில் கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க புதிய முயற்சி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில் 4,88,928 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,302 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 3,724 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். 1,761 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, கேரளாவில் கொரோனா வார்டில் இருப்பாவர்களின் மன அழுத்தத்தை குறைக்க புத்தகங்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டுள்ளன. மெல்லிய இசையை கேட்பதன் மூலம் மனஅழுத்தம் குறையும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.