மன்மோகன் சிங் ஆட்சியில் 600 முறை.. மோடி ஆட்சியில் 2,263 ஊடுருவல் – கே .எஸ் அழகிரி.!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் கடைவீதியில், வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே .எஸ் அழகிரி, ராகுல்காந்தி உத்தரவு பேரில் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சீனாவின் ஊடுருவலை இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளே தவறான செயல் என கூறுகிறது. சீனப் பொருள்களை நாம் புறக்கணிக்க வேண்டும். ராணுவ வீரர்கள் 20 பேர் இந்திய எல்லையில் உயிரிழந்தார்கள். அவர்கள் எந்த ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்….?
இந்தியர்களும் சீன எல்லையில் ஊடுருவவில்லை, சீனர்களும் இந்திய எல்லையில் ஊடுருவவில்லை என சொல்கிறார்கள். அப்படி என்றால் இராணுவ வீரர்கள் எப்படி இறந்தார்கள்..? என்ற கேள்வி எழுந்துள்ளது. மன்மோகன்சிங் ஆட்சியில் 600 முறை சீன ஊடுருவல் இருந்ததாக கூறுகிறார்கள். அப்போது ஒரு அங்குல நிலம் கூட விட்டுக் கொடுக்கப்படவில்லை. ஒரு உயிர் கூட போகவில்லை.
ஆனால், மோடி ஆட்சியில் 2263 முறை சீன ஊடுருவல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதில் அளிக்க வேண்டும் என கூறினார்.