முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் ஜனவரிக்குள் நிறைவு பெறும் -முதலமைச்சர் பழனிசாமி

முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் ஜனவரிக்குள் நிறைவு பெறும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2018 ஆகஸ்ட் மாதம் முக்கொம்பு பழைய கதவணை வெள்ளப்பெருக்கால் உடைந்தது.முக்கொம்பில் புதிய கதவணை கட்டும்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய கதவணை கட்டும்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.முதலமைச்சர் பழனிசாமியிடம் கதவினை கட்டும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,ரூ. 387 கோடி மதிப்பில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டப்படுகிறது .40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 2021 ஜனவரிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025