ஓடிடி தளத்தில் வெளியாகும் சுஷாந்த் சிங்கின் கடைசி திரைப்படம்.!

Default Image

மறைந்த சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த Dil Bechaara ஜூலை 24ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்த வருவதோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் குறித்த செய்திகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கடைசி படத்தை திரையரங்குகளில் வெளியிடுமாறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் சுஷாந்த் சிங்கின் கடைசி படத்தை தியேட்டரில் கூட பார்க்க இயலவில்லை என்ற வருத்தத்தில் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai