இன்று முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் -தூத்துக்குடி ஆட்சியர்.!

Default Image

இன்று முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் உதவித்தொகை தற்பொழுது வழங்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளின் வினியோகப் படிவம் பூர்த்தி செய்ய தேவையான தனிநபர் ஒருவர் மற்றும் சம்பந்தப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.

மேலும் அதற்கு பிறகு, நிவாரணத் தொகை வாங்க அவர்கள் தங்களது அசல் தேசிய அடையாள அட்டையை காண்பித்தும், கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து, ரூ.1,000 நிவாரணத் தொகையை பெற்று கொள்ளலாம் என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று முதல் அடுத்த மாதம் 2ம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நிவாரண உதவித்தொகை தேதி  அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று நேரில் வழங்கப்படும்.

எனவே மேலும்  மாற்றுத்திறனாளிகள் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் நிவாரணத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்றும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்